யாழில் இ.போ ச பேரூந்து சாரதிகள் பணிப் புறக்கணிப்பு

30.1.14

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடாபமல் பணிப் புறக்கணிப்பு பேராடங்களில் ஈடுபட்டதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில் நான்கு மணித்தியாலங்களின் பின்னர் மீணடும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இ.போ..ச பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது ஊர்காவற்துறைப் பகுதியில் வைத்து தனியார் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் போது மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் சாரதி மற்றுமும் நடத்துனர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தாக்குதலைக் கண்டித்தும் இதற்கு உரிய தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் இ.போ.ச. பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்;
 .
இதானால் பாடசாலை மாணவர்கள் முதல் அனைத்துத் தரப்பினர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் பெரும் பாதிப்ப|புக்களையும் எதிர்நோக்கியிருந்தனர்.. இந்நிலையில் இரண்டு தரப்பினர்களுக்குமிடையில் பொலிஸார் சமரச முயற்சிகளை மேற்கொண்ட போது அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன்மற்றும் விந்தன் கனகரட்னம் மற்றும் சுகிர்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன் போது மாகாண சபை உறுப்பினர்கள், தனியார் மற்றும் அரச பேருந்துகளின் சாரதிகள், நடத்துனர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதனையடுத்து அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் வழங்கிய உறுதி மொழிகளையடுத்து போராட்டம் கைவிடப்பட்டாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :