புலிகளின் முன்னாள் போராளிகளை தண்டிக்காமல் புனர்வாழ்வளித்தமைக்கு அமெரிக்கா விமர்சனம்

11.1.14

இலங்கையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் போர்க்குற்ற தூதுர் ஸ்டீபன் ராப் இந்த விமர்சனத்தை வெளியட்டுள்ளதாக ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம்,  விடுதலைப் புலிகளின் போரில் ஈடுபட்ட முன்னாள் உறுப்பினர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு புனர்வாழ்வளித்தமை ஏற்புடையதல்ல என்று ராப், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் கடந்த 6 ம் திகதி நடத்திய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது அமெரிக்காவின் இலங்கை தூதுவரும் உடன் இருந்ததாக ஆங்கில செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
இறுதிப்போரின் போது 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் இலங்கை இராணுவம் கைதுசெய்தது. எனினும் அதில் 11000 பேர்வரை புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை இதற்கு முன்னர் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு திட்டத்தை அமெரிக்கா விமர்சிக்கவில்லை என்றும் ஆதரித்தது என்றும் ஆங்கில செய்திதாள் இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவரை கோடிட்டு தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :