முல்லைத்தீவு:குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

21.1.14

குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். இச்சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குளம் பிரதேச செயலர் பிரிவில் கரும்புள்ளியான்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் நட்டாங்கண்டலைச் சேர்ந்த ஏ.ஜெனிஸ்ரியன் (வயது 18) என்ற இளைஞனே மரணமடைந்துள்ளார்.

இவருடைய உடல் மல்லாவி வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :