புலிகளுடன் மோதியவர் இந்திய இராணுவத்துணைத்தளபதியாக நியமனம்

2.1.14

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நேரடியாகப் பங்கேற்ற லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக், இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த இவர், 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இந்திய அமைதிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் பவான் இராணுவ நடவடிக்கையில் பங்கேற்றிருந்தார்.


அப்போது இந்திய இராணுவத்தின் 53வது காலாற்படைப்பிரிவின் கீழ் செயற்பட்ட கூர்க்கா படைப்பிரிவு ஒன்றின் கொம்பனி கட்டளை அதிகாரியாக லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக் போரில் பங்கெடுத்திருந்தார்.


புலனாய்வு உள்ளிட்ட கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் நிபுணரான இவர், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், ஆயுதப்போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்றவராவார்.


வரும் ஜுலை மாதத்துக்குப் பின்னர் லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக் இந்திய இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :