சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா சதி

7.1.14

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா செயற்பட்டு வருவதாக, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.
"வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது என்பது உறுதி.
அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதைப் பயன்படுத்தி சிறிலங்காவுக்கு எதிரான தடைகளை விதிக்க அமெரிக்கா முற்படும்.

ஏனைய நாடுகளின் மீது அமெரிக்கா பெரியளவில் செல்வாக்குச் செலுத்துவதால், அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பின்னர், அமெரிக்கா அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும்.
அதற்குப் பின்னர், தற்போதைய ஆட்சியை கவிழ்க்கும் வகையில், அதிபர் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் அமெரிக்கா இலக்கு வைத்து, செயற்படும்.

2014ம் ஆண்டின் இறுதியில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல் என்னவென்பது தெளிவாகத் தெரியவரும்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :