சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகை குறைந்துள்ளது!- அவுஸ்திரேலியா

28.1.14

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை அண்மை காலமாக குறைந்துள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் பிரகாரம் நடத்த 36 நாட்களில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் எவரும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் இந்த காலப் பகுதியிலேயே குறைந்தவிலான சட்டவிரோத குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

சட்டவிரோதமாக செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 80 வீதமாக குறைந்துள்ளது. இந்த நிலையில், அவுஸ்திரேலியாவு்ககு சட்டவிரோதமாக செல்லும் நபர்களை நாவுரு மற்றும் மானுஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்லும் நபர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கடும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுக்கும் எனவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :