போர் முடிந்த பிறகும் இலங்கையில் இனப்படுகொலை: இத்தாலி மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

22.1.14


இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக இத்தாலியில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு தனது விசாரணை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், 1956ல் சிங்கள மொழியை முன்னிலைப்படுத்தியது தொடங்கி இலங்கையில் இனப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், போர் முடிந்த பிறகும் தமிழர்களுக்கெதிரான அத்துமீறல்கள் தொடர்வதாகவும், இலங்கை ராணுவம் தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உடந்தையாக இருந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை.

இங்கிலாந்தும், அமெரிக்காவும் இலங்கை இனப்படுகொலைக்கு உறுதுணையாக இருந்ததுடன், இலங்கை அரசின் கூட்டாளிகளாக செயல்பட்டது என்று மனித உரிமை அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

0 கருத்துக்கள் :