துயரத்தில் இருக்கும் குடும்பத்தை காம எண்ணத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரு சில புலம் பெயர் தமிழர்கள்

16.1.14

கிளிநொச்சி திருநகரில் உயிரிழந்த சிறுவனின் தாயும் தங்கைகளும் ஒரு சில புலம் பெயர்
உறவுகளின் காம இச்சைகளுக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள் .

ஒரு சில தினங்களுக்கு முதல் காரணமே தெரியாமல் அச் சிறுவன் இறந்தது அனைவரும் தெரிந்ததே . அந்த சிறுவனின் இறுதிச் சடங்கில் கூட தந்தை பெற்ற மகனுக்கு செய்யும் கடமைகளை செய்ய விடாமல் இலங்கை இராணுவம் 18 நிமிடங்களே மகனுடன் இருக்க அனுமதித்ததும் அனைவரும் அறிந்ததே ...

தந்தையையும் இழந்து இருந்த ஒரே ஒரு ஆண் துணையான மகனையும் இழந்து தவிக்கும் அக் குடும்பத்திற்கு புலம் பெயர் உறவுகள் பலர் உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் அதே வேளை ஒரு சில புலம் பெயர் தமிழர்கள் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு அச் சிறுவனின் தாயிடம் கைத்தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளிலும் காம கதைகளையும் கதைத்து சிறுவனை இழந்து தவிக்கும் அக் குடும்பத்தை மேலும் கவலையடையச் செய்கின்றனர் .

' கணவன் தடுப்பில் தானே உனக்கு என்ன குறை அழகாக தானே இருக்கிறாய் மகனையும் இழந்து விட்டாய் எங்களோடு தொடர்பை வைத்துக் கொள் ' எனக் கூறி அவர்களை தர்ம சங்கடத்திற்குள் உள்ளாக்குகின்றனர் . ஒரு சில புலம் பெயர் தமிழ் உறவுகள் இவ்வாறு கீழ் தரமான செயல்களில் ஈடுபடுவது அனைத்து புலம் பெயர் உறவுகளையும் குறைவாகவே எண்ணத் தோன்றுகின்றது .

கீழ் தரமான எண்ணங்களுடன் அக் குடும்பத்தை தொடர்பு கொள்பவர்கள் என்ன தான் செய்தாலும் இழந்த மகனை திருப்பி கொடுக்க முடியுமா ? உங்கள் வீட்டில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்திருந்தால் இதே வழியை தான் பின்பற்றுவீர்களா ? என ஒரு கணம் சிந்தியுங்கள் .

இதே நிலை தொடருமானால் காம எண்ணங்களுடன் தொடர்பு கொள்பவர்களை இதே தளத்தில் பெயருடன் வெளியிட நேரிடும் .

ஈழத்து உறவுகளின் துயர் துடைக்கா விடிலும் கஷ்டத்தின் மத்தியிலும் மானத்துடன் வாழ விரும்புபவர்களை தொந்தரவு செய்து மேலும் துயரத்திற்கு உள்ளாக்காதீர்கள் .

நிலா .http://www.ttnnews.com/flashnews/6708-2014-01-16-14-09-00

0 கருத்துக்கள் :