பிரான்ஸ் தமிழர்திரு​நாள் பெருநிகழ்வி​ல் தமிழர்களாய் ஒன்றுபடுவோ​ம்

17.1.14

பிரான்ஸ் தமிழ்சமூகத்திடையேயான தனித்துவமான நிகழ்வென்ற பெருமையினைக் பெற்ற தமிழ்திருநாள் , வரும் ஞாயிற்றுக்கிழமை(19-01-2014) சிறப்பாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பிரான்ஸ் சிலம்பு  அமைப்பினால் எட்டாவது நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இப்பெருவிழாவில், வழமைபோல் பல்வேறுதுறைசார் வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்துக் கொள்ள இருக்கின்றனர்.


தமிழர்களின் பாரம்பரிய தொன்மை இசையான பறை, தமிழர்பெருநாளான இந்நிகழ்வில் சிறப்பு இடத்தினைப் பெற இருப்பதோடு, பொங்கல், கண்காட்சி, தமிழர் உணவுக்காட்சி, கோலமிடல், அகரம் எழுதல், கைவினைக் கண்காட்சி உள்ளடங்கலாக பல்வேறு அரங்க நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.


பிரதம அதிதிகளாக, சுவீடன் கீழத்தேய மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க், புகழ்பெற்ற வாழும் தமிழ் வானொலி தொகுப்பு மேதை பி.எச். அப்துல் ஹமீட் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைப் பீடாதிபதி பால சுகுமார் ஆகியோரும், சிறப்புக் கலைஞர்களாக இலண்டன் வாழ் இசைக் கலைஞன் சந்தோஷ், பாரீஸ் வாழ் நடனக் கலைஞன் பிறேம்கோபால் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.


தமிழர் நிகழ்வில் பெரும்பாலும் இடம்பெறுகின்ற பாரிசின் மார்ஸ் டோர்மி மண்டபத்தில் காலை 11.30 மணி தொடங்கி மாலை 6.30 வரை இடம்பெறவுள்ளது.


இன்று பிரதேசங்களால் – நாடுகளால் – மதங்களால் - சாதியங்களால் - வர்க்கவேறுபாடுகளால் எனப் பலவாகப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணைக்கூடியப் பொது நாள் இந்த தைப்பொங்கல் நாள்- இது எமது அடையாள நாளாகும் என இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள சிலம்பு அமைப்பின் செயலாளர் க. முகுந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :