விடுதலைப் புலிகளை அழித்தொழித்த சிறிலங்காவின் திட்டத்தை தனது நாட்டில் செயற்படுத்தும் பாகிஸ்தான்

22.1.14

விடுதலைப் புலிகளை படுகொலை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் எத்தகைய திட்டம் வகுத்ததோ, அதையொத்த திட்டத்துடன், பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் [Balochistan] மாகாணத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலூச் [Baloch] செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்வதற்கு பாகிஸ்தான் இாணுவம் பாகிஸ்தான் அமைச்சரவையின் அனுமதி கோரப்படவுள்ளமை தொடர்பில் தனது அதிருப்தியை பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் கலாநிதி நசீர் எஸ் பாற்றி வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்புத் தொடர்பில் இரு வெவ்வேறு திட்ட வரைபுகள், அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது கையளிக்கப்படவுள்ளதாகவும், மத அமைப்புக்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அயர்லாந்துத் திட்டம் மற்றும் விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான சிறிலங்காவின் திட்டம் ஆகிய இரண்டும் பாகிஸ்தானில் செயற்படும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான பாதுகாப்புக் கோட்பாடாக பாகிஸ்தான் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் எல்லையோர பழங்குடிகளின் அமைப்பான தெஹ்ரேக் தலிபானுடன் [Tehreek Talban Pakistan - TTP] விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் அரசாங்கமானது ஐரிஸ் சமாதானத் திட்டத்தையும் இதேபோன்று பலூச்சிஸ்தான் மாகாணத்தில் செயற்படும் பலூச் செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ்ப் புலிகளைப் படுகொலை செய்வதற்காக கைக்கொள்ளப்பட்ட திட்டத்தையும் பாகிஸ்தானிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் திட்டமிடுவதாக கலாநிதி நசீர் பாற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.

பலூச்சிஸ்தான் மலைகளை மையமிட்டு செயற்பட்ட நவாப் அக்பர் புக்ரியின் கோரிக்கைகளை செவிமடுத்து அவருடன் பேச்சுக்களை நடாத்துவதற்குப் பதிலாக சீனாவால் வழங்கப்பட்ட தொழினுட்பத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இராணுவத்தால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.

சீன ஆயுதங்கள் மற்றும் தொழினுட்பங்கள் போன்றன பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்ப்பட்டு பின்னர் அங்கிருந்து சிறிலங்காவுக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் இவை தமிழ்ப் புலிகளை படுகொலை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் போரில் ஈடுபட்ட தமிழர்களின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டதுடன், தமிழர் வாழும் இடங்களில் சிறிலங்கா இராணுவமானது பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது எனவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 45,000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்துள்ள தெஹ்ரேக் தலிபான்களுடன் பாகிஸ்தான் அரசாங்கமானது பேச்சுக்களை நடாத்த விரும்பும் அதேவேளையில், பலூச்சிஸ்தானில் செயற்படும் பலூச் செயற்பாட்டாளர்களை படுகொலை செய்ய விரும்புவதாகவும் நசீர் பாற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.

தெஹ்ரேக் தலிபான் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுடன் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு பேச்சுக்களை நடாத்த முன்வரும் பாகிஸ்தானிய அரசாங்கமானது பலோச் சுதந்திரப் போராளிகளைப் படுகொலை செய்யத் திட்டமிடுவது ஏன் என்பது தொடர்பில் பாகிஸ்தானைச் சேர்ந்த அனைத்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கேள்வியெழுப்ப வேண்டும் என கலாநிதி நசீர் பாற்றி வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வழிமூலம் : Balochwarna Online News

0 கருத்துக்கள் :