வீறுகொண்ட மண் :ஜெனீவாவில் நீதிக்கான மக்கள் ஒன்றுகூடல்

26.1.14

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையின் ஆணைய கூட்டத்தொடரில், தமிழர்களுக்கான நீதிகோரும் செயற்பாடுகள் பல்வேறு மட்டங்களில் தமிழர் தரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிக்கான மக்கள் ஒன்றுகூடலுக்கு வலுவூட்டி பிரித்தானியாவில்இறுவெட்டு ஒன்று வெளிவந்துள்ளது.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகளில் ஒருவரான நிமலன் சீவரட்ரணம் அவர்களின் முன்னெடுப்பில் வெளிவந்துள்ள இந்த இறுவெட்டானது, தேனிசை செல்லப்பா அவர்களின் பாடல்களை மையப்படுத்தி வெளிவந்துள்ளது.


ஜெனீவாக் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பில் அனைத்துல விசாணைக்கான கதவுகள் திறக்க வேண்டும் என்ற அவவாவுடன், புலம்பெயர் தேசங்களில் தனிநபர்காளகவும், கூட்டாகவும், அமைப்புரீதியாகவும் செயற்பாடுகள்  சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதனொரு அங்கமாக இந்த இறுவெட்டானது 'வீறுகொண்ட  மண்' எனும் முழக்கத்துடன் வெளிவந்துள்ளது.


'வீறுகொண்ட மண்' இறுவெட்டை பெற்றுக்கொள்ள விரும்புவோர், நாடுகடந்த தமிழீழ அரசாங்க்கத்தின் அவை உறுப்பினர்களை தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :