ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை: உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தூக்கு ரத்தாக வாய்ப்பு

28.1.14

முன்னாள் பாரதப் பிரதமரான ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. அந்த விசாரணையின் முடிவில் அத்தண்டணையிலிருந்து விடுவித்து தலைமை நீதிபதி சதாசிவத்தின் அமர்வு தீர்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் கூறிய முகாந்திரம் இவ்வழக்கிற்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.

எனவே நீதிமன்றத்தின் இன்றைய விசாரணையின் முடிவில் இவர்களும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம் என தெரிகிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து அவர்களது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ந் தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்தால் அவர்கள் தூக்கிலிருந்து தற்காலிமாக தப்பிக்க நேர்ந்தது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் தூக்கில் அவர்கள் நிரந்தரமாக தப்பிக்க முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

0 கருத்துக்கள் :