தைந்திங்களின் பயணம் தமிழர் வாழ்வில் விடியலைக் கொண்டு வரட்டும்.த.தே.கூ பொங்கல் வாழ்த்துச் செய்தி

14.1.14

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட செயலகமான அறிவகத்தில் தைப்பொங்கல் பண்பாடு அமைதியான கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

பா.உறுப்பினர் சி.சிறீதரன் உட்பட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

பிறந்திருக்கும் தைத்திங்கள் தொடர்பாக அறிவகம் விடுத்துள்ள குறிப்பில்,
நீண்ட காலமாக எமது மக்கள் ஏக்கமும் துயர்களோடும் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தைத்திங்கள் பிறக்கின்றபோது.
பல்வேறு அபிலாசைகளை எமது மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமந்தும் அதிகம் ஏமாற்றங்களையே சந்தித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் எமது மக்களின் வாழ்வில் உரிமை பிரச்சினை இன்று உணரப்பட்டுள்ளதாக உலக நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றபோதும் அவற்றின் அறுவடையை நாம் எப்போது அனுபவிப்பது என்ற ஏக்கமும் வேணவாவும் எமது மக்களிடம் உண்டு.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்யும் மூத்ததமிழ்க் குடியின் பண்பாடு இன்றுவரை எத்தனையோ நெருக்கடிகள், மத்தியிலும் எமது மக்களால் தம்மால் இயன்றவரையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
தைப்பொங்கல் என்ற இந்த பண்பாட்டை சுற்றி எமது சந்ததிக்கான சேதிகளும் இருக்கிறது என்பதால் எமது மக்கள் இந்த பண்பாட்டை உயிருக்கு நிகராக நேசித்து வருகின்றார்கள்.

இத்தகு சிறப்புமிகு இந்நன்நாளில் எமது மக்களின் அர்ப்பணிப்புக்கான, விளைச்சல்களுக்கான வழிகள் இந்நாட்டின் மனமாற்றத்தினூடாக புலரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :