இறைவன் இவர்களை எப்படி ஆசீர்வதிப்பார்? விமல் வீரவன்ச

12.1.14

இலங்கை மண்ணில் பிறந்து இந்த நாட்டு மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்த இந்த கிறிஸ்தவ மதகுருமார்கள் இலங்கைக்கு எதிராகச் செய்யும் செயல்களை இறைவன் ஆசீர்வதிப்பாரா? என கேட்க விரும்புகிறேன் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இவர்கள் சொல்வதெல்லாம் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதம் பாவித்தார்கள், சிவில் சமூகத்தை கொன்றார்கள் கிளஸ்டர் குண்டு பாவிக்கப்பட்டது எனச் சொல்லி வருகின்றனர்.

இலங்கையில் வடக்கில் மட்டும் கத்தோலிக்க சமூகம் வாழவில்லை, இலங்கையில் நாலா பாகத்திலும் கத்தோலிக்கச் சமூகம் பரந்து வாழுகின்றனர். இவர்கள் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களது ஒரு சமாதான பாலமாகவே இருந்து வருகின்றனர்.
அவர்கள் ஒருபோதும் தான் பிறந்த நாட்டுக்காக செயல்படுவதில்லை. இந்த நாட்டிற்கு நன்மை பயக்கும் செயல்களிலேயே ஈடுபடுகின்றனர். இவர்கள் இலங்கை பற்றி நல்ல அபிப்பிராயங்களே முழு உலகுக்கும் தெரிவிப்பதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் மற்றுமொரு ஒரு சதி முயற்சியே அமெரிக்காவின் ஸ்டிவன் ஜே ராப் வடக்கில் புதுமாத்தளனிற்குச் சென்று எடுத்துள்ள புகைப்படம் விளக்குகின்றது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக மற்றுமொரு சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்காகவும் அதற்குரிய அவசியமான அறிக்கைகள் தடயங்களை சமர்ப்பிப்பதற்குமே ஸ்டிவன் ஜே ராப் இலங்கை வந்துள்ளார்.
இவர் நேரடியாக இலங்கைக்கு வந்து வடக்குக்கு போய் யுத்த தடயங்களை நேரடியாக சென்று கண்காணிக்கும் ஒரு நாடகமே தற்பொழுது அரங்கேறுகின்றது.

அதில் ஓர் அங்கமாகவே இலங்கை வந்திருந்த அமெரிக்க தூதுவர் மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் மிச்சல் சிசனும் வடக்கில் புதுமாத்தளன் பிரதேசத்திற்குச் சென்று அக்கட்டிடத்தையும் சென்று பார்வையிட்டும் புகைப்படமும் எடுத்துள்ளனர்.

0 கருத்துக்கள் :