தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம உரிமை வழங்க வேண்டும் - அமைச்சர் வாசுதேவ

20.1.14

தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் இலங்கையில் தாய்மொழிகளாகக் காணப்படுகின்றன. எனவே இரண்டு மொழிகளுக்கும் சமமான உரிமையை நாம் வழங்க வேண்டும்.
எமது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு இதுவே அவசியம். இவ்வாறு தெரிவித்தார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சு மற்றும் யாழ். மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து நடத்திய 2014  ஆண்டுக்கான தைப் பொங்கல் விழா நேற்று நல்லூர் ஆலய முன்றலில் நடைபெற்றது.
 
விழாவுக்கு வருகை தந்த விருந்தினர்கள் பாரம்பரிய கிராமிய நடனத்துடன் நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டதைக் தொடர்ந்து மண்டபத்தில் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந்த நிகழ்வில் அவர் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

நாட்டின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளாக இவ்வாறான நிகழ்வுகள் கொண்டாடப் படுகின்றன. இதன் மூலம் அவர்களுடைய பாரம்பரிய, கலாசாரங்கள் வெளிப்படுத்தப் படுவதுடன் இனங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்.
வட பகுதியிலும், தென்பகுதியிலும் இருக்கக் கூடிய கலாசாரங் களுக்கிடையிலான வேறுபாடு கிடையாது. மொழிகள் மாற்றாக இருந்தாலும் அவை இரண்டும் தாய் மொழி யாகக் கொள்ளப்படுகின்றன. இரண்டு மொழிகளுக்கும் சமமான உரிமை உள்ளது.

எங்களுடைய வரலாறு, பாரம் பரியக் கலாசாரம் என்பவற்றைக் கொண்டே நாம் வாழ் கின்றோம். மாவட்ட ரீதியாக அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடத்தப்படு கின்றன.
யாழ்ப்பாணத்தின் கலாசாரத்துக்கு அமைவாக தைப்பொங்கல் விழா இங்கு கொண்டாடப் படுகின்றது. இதன் ஊடாக நாம் எமது ஒருமைப் பாட்டினை வெளிப்படுத்து வோம் - என்றார்.

0 கருத்துக்கள் :