மார்ச்சுக்குள் உள்ளக விசாரணையைத் தொடங்காவிடின் அனைத்துலக விசாரணை தான் – பிரித்தானியா திட்டவட்டம்

18.1.14

நம்பகமான உள்நாட்டு செயல்முறைகளை வரும் மார்ச் மாதத்துக்குள் முறைப்படி ஆரம்பிக்கா விட்டால், சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், உள்ள தமது ஆசனத்தை பிரித்தானியா பயன்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் பணியக இணையமைச்சர் ஹியூகோ ஸ்வைர், நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக அனைத்துலக பங்காளர்களுடன் நாம் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறோம்.

கடந்த நவம்பர் 18ம் நாள், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான, வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக கூறியிருந்தார்.

நம்பகமான உள்நாட்டு செயல்முறைகளை வரும் மார்ச் மாதத்துக்குள் முறைப்படி ஆரம்பிக்கா விட்டால், சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், உள்ள எமது ஆசனத்தை பயன்படுத்துவது என்பதில் பிரித்தானியா தெளிவாக இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :