இந்தியாவிற்கு இன்று காலை பயணமானார் ராதிகா

4.1.14

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ராதீகா இன்று காலை இந்தியா நோக்கிப் பயணித்தார் என குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிற்சபேசன் கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
ராதீகா சிற்சபேசன் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற

உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ராதீகா சிற்சபேசன் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் அந்தத் தகவல் மறுக்கப்பட்டிருந்ததுடன், தம்மை எச்சரித்ததாக ராதீகா அறிவித்திருந்தார்.

0 கருத்துக்கள் :