அத்தனையும் மீண்டும் திரும்ப பொங்கலிடுவோம் வாருங்கள்-ச.முத்து!

14.1.14

"எல்லாம் இழந்து இருப்பு
  அனைத்தும் தொலைத்துவிட்டு
நடு இரவுக் கருமைக்குள்
எம் இனத்தினது நாதியற்ற நிலைமாறி
எமக்கென்றோர் போராட்டபெரு அமைப்பு
எமக்கென்று சொந்தமாக ஒருகுடில்
 எம் தேசத்து பிஞ்சுகள் ஒரு பயமும் இன்றி ஓடிவிளையாடிட ஒரு சின்னபுல் வெளி..
எமக்கென்று கொடி எமக்கென்றே ஒரு தேசம்
 இத்தனையும் அழகாக கொண்டு
எம்மை வழிநடாத்த மீண்டும் அந்த பெருந்தலைவன் அத்தனையும் அழகாக மீண்டும் திரும்ப வேண்டும்
என கேட்டு ஆதவனை வணங்கி அற்புத பொங்கலிடுவோம் வாருங்கள்."


0 கருத்துக்கள் :