தமிழ் இனப்படுகொலையினை மறந்து இராணுவத்துடன் கைகேர்க்க வேண்டுமாம்

4.1.14

யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப்படுகொலையினை மறந்து இராணுவத்துடன் கைகேர்த்து நல்லுறவு பேணவேண்டும் என்று

யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் பேசிலாலே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை அரசாங்கத்துடன் பேச தயாராக வேண்டும் என்றும் அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியான இருந்து தற்போது இடமாற்றம் வழங்கப்பட்டு கொழும்பிற்கு செல்லவிருக்கும் மகிந்த ஹத்துறுசிங்கவின் பிரியாவிடை நிகழ்வு இன்று 4 ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் பலாலி இராணுவத் தலமையகத்தில் நடைபெற்றது.

இப்பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்.

கடந்த 4 வருடமாக யாழ்.மாவட்டத்தின் கட்டளைத்தளபதியாக கடமையாற்றியுள்ளேன். இந்நாட்களில் தமிழ் மொழி மூலம் என்னால் பேச முடியாமல் இருப்பதற்காக நான் வருந்துகின்றேன். தமிழ் மொழியினைக் கற்பதற்கு எனக்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது.
நான் யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதியாக பெறுப்பேற்ற போது இங்கிருந்த 4 படையணிகளிலும் 27 ஆயிரத்து 600 இராணுவத்தினர் கடமையில் இருந்தனர்.
ஆனால் தற்போது படிப்படியாக இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக தற்போது 13 ஆயிரத்து 150 இராணுவமே யாழில் நிலைகொண்டுள்ளது.

நடந்து முடிந்த யுத்தத்தில் மக்கள் பாரிய அழிவினைச் சந்தித்திருக்கின்றார்கள். இதனால் அம்மக்களுக்கு பாரிய தேவைகள் உள்ளது.
தற்போது தமிழ் மக்களிடம் ஓர் எண்ணம் உள்ளது. அதாவது இராணுவம் என்றால் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்று. இந்த இராணுவமே மக்களின் அழிவுக்குக் காரணமென்றும். அந்த எண்ணம் மாற்றமடைய வேண்டும். மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நல்லுறவு மேம்பட வேண்டும்.
தற்போத மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கின்றது. இந்நிலையில் மாகாண அரசும் மத்திய அரசும் முரண்பட்டுக் கொள்ளாமல் இரண்டு தரப்பினர்களும் பேசித் தீர்க்கவே முன்வர வேண்டும். அத்தோடு கடந்த காலங்களைப் போன்றதான சூழ்நிலை ஏற்படக் கூடாது.

0 கருத்துக்கள் :