அமெரிக்க அதிகாரி நிஷா பிஸ்வாலின் சிறிலங்கா பயணம் பிற்போடப்பட்டது

13.1.14

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் பிற்போடப்பட்டுள்ளது.
முன்னதாக, இவர் கடந்த 10ம் நாள் சிறிலங்கா வருவார் என்று கூறப்பட்டது.

பின்னர், அவர் இன்று கொழும்பு வரலாம் என்று தகவல்கள் வெளியாகின.
எனினும், அவர் இன்று கொழும்பு வரமாட்டார் என்றும், அவரது பயணம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வருவதற்கு முன்னர், அமெரிக்க உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகலை அடுத்து, அவரது இந்தியப் பயணம் தாமதமடைந்துள்ளது.

இதனால் நிஷா தேசாய் பிஸ்வாலின் சிறிலங்கா பயணமும் தாமதமடைவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :