அனைத்துலக அளவில் சிறிலங்கா பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் – அனந்தி எச்சரிக்கை

15.1.14

தம்மைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் எந்த முயற்சியையும் தாம் எதிர்த்துப் போராடப் போவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயற்படும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு அனுப்புவது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பாக, உள்ளூர் ஊடகங்களுக்கு அனந்தி சசிதரன் தெரிவித்ததாக, பிரிஐ தகவல் வெளியிடுகையில்,

“என்னைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும், அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.
நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருக்கவில்லை.
ஆனால், எனது கணவனுக்கும், போரில் காணாமற்போன ஏனையவர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :