சிறு­­பான்­மை­யி­னரை அடக்கி ஆள்­வ­தா­ன­து பல பிர­பா­க­ரன்­களை உரு­வாக்­கு­வ­தற்கு சமம்­: பெரேரா

23.1.14

தற்­போது நாட்டில் யுத்தம் நிறை­வ­டைந்­துள்­ளது. யுத்தம் முடி­வுற்­ற­மை­யினால் அதி­க­மாக மகிழ்ச்­சி­ய­டை­ப­வர்கள் தமி­ழர்­க­ளா­கத்தான் இருக்க முடியும். இந்­நி­லையில் நாட்டின் சிறு­பான்­மை­யி­னத்­த­வரை அடக்கி ஆள்­வ­தா­னது விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனைப் போன்று பலரை புதி­தாக உரு­வாக்­கு­வ­தற்கு சம­மா­னது என்று வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் சமூக நலன்­புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் நடை­பெற்ற தைப்­பொங்கல் வைப­வத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்
இலங்கையில் 30 வருட கால­மாக யுத்தம் நடை­பெற்று வந்­தது. இதனால் நமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு பெரு­ம­ளவில் பாதிப்பு ஏற்­பட்­டது. வட­கி­ழக்கு பகு­தி­களில் மாண­வர்­களின் கல்வி நிலை பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டது.

அத்­துடன் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்கம் வட கிழக்கில் வாழும் சிறு­வர்­க­ளுக்கு பாட­சாலை புத்­தகப் பைகளை வழங்­கு­வ­தற்கு பதி­லாக துப்­பாக்­கி­களை வழங்­கி­யது. இதனால் தனது சிறு­வ­யதில் புத்­தகம் ஏந்த வேண்­டிய கைகளில் துப்­பாக்­கி­யையே கையி­லே ஏந்­தினர் வட­கி­ழக்கு அப்­பாவி சிறு­வர்கள்.

இந்­நி­லையில் விடு­தலைப் புலி­களை ஒழித்­துக்­கட்டி தற்­போது சமா­தா­ன­ சூழலை ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ நமக்கு பெற்றுத் தந்­துள்ளார்.தற்­போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்­களின் வாழ்க்கை மேம்­ப­டுத்­தப்­பட்டு தற்­ச­மயம் அனைத்து வச­தி­களும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை புதி­தாக மீளவும் வட மாகாண சபை ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மக்­களின் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மேம்­ப­டுத்­தப்­பட்டு சீரான கல்வி வழங்­கப்­பட்டு வரு­கி­றது. இதற்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே மூல கார­ண­மாகும்.

எனவே, யுத்தம் நிறை­வ­டைந்­த­மை­யினால் முதலில் மகிழ்ச்­சி­ய­டை­வது தமிழ் மக்­க­ளாகும்.இருப்­பினும் தற்­போது சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு அசம்­பா­வி­த­ங்கள் இடம் பெற்று வரு­கி­றது.இதனால் நாட்டின் எதிர்காலத்திற்கே பாதிப்பு ஏற்படும்.
இந்நிலையில் நாட்டின் சிறுபான்மை யினத்தவரை அடக்கி ஆள்வதானது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனைப் போன்று பலரை உருவாக்குவதற்கு சமமானது என்றார்.

0 கருத்துக்கள் :