நடுவானில் விமானி மயக்கம்: விமானத்தை பத்திரமாக தரை இறக்கிய வாலிபர்

27.1.14

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் டெரக் நெவிலி (61). விமானி ஆக பணி புரிகிறார்.
இவர் செஸ்னா 150 ரக விமானத்தை ஓட்டினார். அது ஒரு என்ஜின் மட்டுமே பொருத்தப்பட்ட எடை குறைந்த விமானமாகும். அவருடன் டிராய் ஜென்கின்ஸ் என்ற 19 வயது வாலிபர் உள்ளிட்ட சிலர் பயணம் செய்தனர்.

இவர்களது விமானம் போர்ப்ஸ் விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது விமானி நெவிலிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
அதற்கு முன்னதாகவே யாராவது தனக்கு உதவும்படி விமானி அறையில் இருந்து ‘மைக்’கில் தெரிவித்தார். உடனே ஜென்கின்ஸ் அங்கு விரைந்து சென்றார். அப்போதுதான் விமானி நெவிலி மயங்கி கொண்டிருந்தார்.

உடனே சுதாரித்த அவர் விமானத்தை தானே ஓட்டினார். சுமார் 30 நிமிட நேரம் விமானத்தை பேர்ப்ஸ் விமான நிலையத்தின் மீது வட்டமடித்தார்.

அதற்குள் விமானி மயங்கிய தகவல் விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த வழிகாட்டுதலின்படி வாலிபர் ஜென்கின்ஸ் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.
உடனே மயங்கிய நிலையில் இருந்த விமானி நெவிலி அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏன் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது என தெரியவில்லை.

வாலிபர் ஜென்கின்ஸ் விமானம் ஓட்டத் தெரிந்தவர். ஏற்கனவே ஒரு தடவை விமானத்தை ஓட்டி தரை இறக்கியுள்ளார். அந்த அனுபவமே தற்போது தனக்கு கைகொடுத்ததாக தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :