கர்ப்பிணித் தாய்மார்களை லொறியில் ஏற்றி செல்ல முயற்சி

22.1.14

நானு­ஓயா பொலிஸ் பிரி­விற்குட்­பட்ட உட­ர­தல்ல தோட்­டத்தில் நேற்று காலை
கர்ப்­பிணி தாய்­மார்­களை சோத­னைக்­கென லொறியில் ஏற்றி அனுப்ப தோட்ட நிர்­வாகம் முயற்­சித்­த­மையால் அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நானு­ஓயா – உட­ர­தல்ல தோட்­டத்தில் 28 கர்ப்­பிணித் தாய்­மார்­க­ளுக்கு நேற்று மருத்­துவ சோதனை செய்­யப்­படும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு நுவ­ரெ­லியா சுகா­தார வைத்­திய அதி­கா­ரியை உட­ர­தல்ல தோட்­டத்­திற்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்ட போதும் அவர் வர மறுத்­து­விட்­ட­தாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தோட்டப்புற பாதை குண்டும் குழி­யு­மாகக் காணப்­படுவதல் அவ்வீதிவழியே பயணிப்பதில் அசௌகரியம் ஏற்படுவதாலேயே மேற்படி அதிகாரி வரமறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்­நி­லையில் ஏனைய நாட்­களில் நானு­ஓயா நக­ரத்­திற்கு உடரதல்­லையில் இருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரம் தனியார் வேன் ஒன்றில் கர்ப்­பிணித் தாய்­மார்கள் சுகா­தார பரி­சோ­த­னைக்கு அழைத்துச் செல்­லப்­ப­டுவர்.

ஆனால் நேற்று குறித்த வேனும் கராஜில் இருப்­பதால் வேனில் அழைத்துச் செல்ல முடி­ய­வில்லை. தோட்ட அம்­பி­யூ­லன்ஸும் பழு­தாகி விட்டதால் கர்ப்­பிணித் தாய்­மார்­களை சோத­னைக்கு அவ­சியம் அனுப்ப வேண்டும் என்­ப­தற்­காக 8 கிலோ மீற்றர் குண்டும் குழி­யு­மான பாதையில் லொறி­யொன்றில் ஏற்றி அனுப்ப முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

விலங்­கு­களால் கூட நடந்து செல்ல முடி­யாத இப் பாதையில் 28 கர்ப்­பிணித் தாய்­மார்­களை லொறி­யொன்றில் ஏற்றிச் செல்லும் நட­வ­டிக்­கைக்கு தோட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­ததை அடுத்து அங்கு குழப்ப நிலை ஏற்­பட்­டது.

இறு­தியில் தாய்­மார்கள் மருத்­துவ சோத­னைக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை.
இது குறித்து கருத்து தெரி­வித்த நுவ­ரெ­லியா வைத்­திய அதி­காரி ஜெய­வர்த்­தனஇ ´10 ஆயிரம் மக்கள் சனத்­தொகை கொண்ட பகு­திக்­குத்தான் மருத்­துவ நிலையம் அமைக்­கப்­படும். உட­ர­தல்­லயில் 2000 பேர் மாத்­திரம் உள்­ளனர். இவர்­க­ளுக்­கென்று ஒரு தனி­யான மருத்­துவ நிலையம் அமைக்க எம்­மிடம் ஆளணி இல்லை.

உட­ரதல்ல தோட்­டத்­திற்கு மாத்­திரம் மருத்­துவ நிலையம் அமைத்தால் ஏனைய தோட்ட மக்­க­ளுக்கும் அப்­ப­டியே கோருவர். அப்­போது எம்மால் ஒன்றும் செய்ய முடி­யாது போய்­விடும். நுவ­ரெ­லி­யா­விற்கு ஒரு வைத்­திய அதி­கா­ரியும் ஒரு வாக­னமும் மாத்­தி­ரமே உள்ளது. இதனை வைத்துக் கொண்டுதான் 60,000ற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டியுள்ளது.

வீதி செப்பனிடப்பட்டால் உடரதல்ல மக்கள் நானுஓயா வந்து செல்ல இலகுவாக இருக்கும். இதற்கான அழுத்தத்தை தோட்ட மக்களே கொடுக்க வேண்டும்.´ என்றார்

0 கருத்துக்கள் :