யேர்மனியில் டோட்முண்ட் நகரில் சிறப்பாக நடந்தேறிய மாபெரும் பொங்கல்விழா

21.1.14

யேர்மனி டோட்முண்ட் நகரில் பொங்கல் விழா (19.01.2014)சிறப்பாக நடந்தேறியுள்ளது   இந்த நிகழ்வானது குறித்தநேரத்தில் ஆரம்பமானது.  இதில் டோட்முண்ட் சிவன் ஆலயக்குருவான தெய்வேந்திரக்குருக்களும் சுவெற்றா ஆலயத்தின் ஐயா யெயந்தி நாதசர்மா அவர்களும்    இவர்களுடன் இணைந்து  டோட்முண்ட் நகரத்தின் ஓர்பகுதிக்கான நகரபிதா திரு.கண்ஸ் சமில்ளர்  அவர்களுமாக  தமிழரின்  பாரம்பரிய வாத்தியங்களில் ஒன்றான நாதஸ்வரம் மேளம் முழங்க மங்கலவிளக்கேற்றலோடு கூடிய நிகழ்சிகள் ஆரம்பமானது.
பின்எமது நாட்டுக்காய் உயிர் நீத்த மாவீரர்களுக்கும்  மக்களுக்கான அகவணக்கத்துடன்  ஆசியுரை  வரவேற்பு நடனம் சிறப்புரை

குரலிசை  சுரத்தட்டு வாத்திய இசை வயலின் வீணைஇசை  பட்டிமன்றம்  தாளவாத்தியக் கச்சேரிகள் நடனங்கள்  நாடகம்  எனபல்சுவையான நிகழ்வுகள் மக்களை இருந்த இடத்தைவிட்டு நகராத அளவுக்கு  கவர்ந்த நிகழ்வாக அமைந்தது மட்டுமல்ல பார்வையாளர்கள் ஆசனங்கள் நிறைந்து  இடமில்லாது நின்று பார்த்த  நிகழ்வாக  மட்டுமல்ல பல ஆண்டுகளின்பின் முதல் முதலாக மக்களால் ஓன்றிணைந்து நூற்றுக்கு மேற்பட்ட இளம் கலைஞர்கள் பங்கேற்றது இங்கே வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமைந்திருந்தது.

மகிழ்வாக இருந்தது மட்டுமல்ல வந்தவர்கள் இவ் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களைப் பாராட்டி இது போன்ற நிகழ்வுகள்  நடத்தப்பட்டால் தாங்கள் ஆதரவு  தருவததாகக்கூறியது ஒருந்கிணைப்பாளர்களுக்கு மிக மகிழ்வைத்தந்ததாக உள்ளது  இணைந்து எம்இளையோர் கலைக்கும் எம் கலாச்சார வளர்ச்சிக்கும்  பணிபுரிவோம்  என்ற தகவலுடன் இணைந்த பார்வையாளர்களுக்கும் நன்றியுடன் நிறைவுகாண்போம் 
 

0 கருத்துக்கள் :