ஆனையிறவு ரயில் நிலையத்திற்கு சிங்களப் பெயர்

3.1.14

ஆனையிறவு ரயில் நிலையத்திற்கு சிங்களப் பெயரைச் சூட்டும் முயற்சி மொழியுரிமை மீறலாகும். அதனை தான் கடுமையாக எதிர்ப்பதாக தேசிய நல்லிணக்க மற்றும் மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மோதல்களுக்குப் பின் புனரமைக்கப்படும் வடக்கு நோக்கிய ரயில் பாதையில் முக்கிய இடைநிலையமான ஆனையிறவு ரயில் நிலையத்துக்கு சிங்களத்தில் பெயர் சூட்டப்படுவதற்கான போக்குவரத்து அமைச்சரின் ஆணை கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
   
குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இது மொழியுரிமைகளை மீறும் செயல். தேசிய மொழிகள் தொடர்பில் சமத்துவமான நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு வேலைத்திட்டங்களை முன்மொழிந்தாலும் அது பெரியளவில் வெற்றியளிக்கவில்லை என்றார்.

எனினும் ஆனையிறவு ரயில் நிலையத்தின் பெயரை சிங்களத்திற்கு மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தி போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மோதல்களுக்குப் பின் வடக்கில் பல இடங்களில் சிங்கள பெயர்களை சூட்டும் நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்கனவே குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துக்கள் :