மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வீதி முழுமையாக உடைக்கப்பட்டு தேடுதல்: மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டன

20.1.14

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியிலுள்ள மனித புதை குழி நேற்று திங்கட்கிழமை  மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் தோண்டப்பட்டுள்ளது.



ஒன்பதாவது தடவையாக கடந்த சனிக்கிழமை  மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் போது மூன்று மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.


நேற்று முன்தினம் சனிக்கிழமை  வரை 40 எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்  இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணிமுதல் பகல் வரை குறித்த மனித புதை குழி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மீண்டும் தோண்டப்பட்டது.

இதன்போது ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதியிலிருந்து குறித்த வீதி முழுமையாக உடைக்கப்பட்டு,மனித புதை குழி விஸ்தரிக்கப்பட்டு மேலும் தோண்டப்பட்டது.

இதன்போது குறித்த மனித புதை குழியிலிருந்து புதிதாக மேலும் மனித எச்சங்கள் பல உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


குறித்த வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டு தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் தோண்டப்பட்டு வருகின்றது.மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த புதை குழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :