கானாவில் பொட்டம்மான்!: கோத்தபாயவின் கற்பனை

19.1.14

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மான் கானாவில் இருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் சதித் திட்டம் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் என அரசாங்கம் கூறும் சீலன் என்பவர், புலிகளின் இலகு ரக விமானங்களை ஓட்டிச் செல்லும் விமானியாக பயிற்சி பெற்றவர் எனவும் இந்தோனேசியாவிற்கு தப்பிச் சென்ற சீலன், புலிகள் அமைப்பின் கீழ் உறுப்பினராக இருந்தாரே அன்றி தலைமை பதவிகளை வகிக்கவில்லை என தெரியவருகிறது.

சீலன், அண்மைய காலத்தில் புலிகளின் தலைவர் என்ற பெயரில் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. கோத்தபாய ராஜபக்ஷவின் புலனாய்வு பிரிவினரும் கே.பியும் இணைந்து உருவாக்கிய நபரே சீலன் என அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
அத்துடன் சீலன் என்பவர் இந்தோனேசியவில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் என்ற செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீலன் மற்றும் பொட்டம்மான் கானாவில் இருக்கின்றார் என்ற செய்தி கோத்தபாயவின் புலனாய்வாளர்களால் புனையப்பட்ட கதை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :