புதிய தமிழ் கூட்டணி அமைப்புக்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

15.1.14

புதிய தமிழ் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான உடன்பாட்டை எட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஈபிடிபியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் உடன்பாடு எட்டப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காணுவதே இந்தக் கூட்டணியின் நோக்கமாகும் என்று ஈபிடிபியின் பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புதிய தமிழ் கூட்டணியில் ஈபிடிபி,  சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி, வரதராஜப்பெருமாளின் ஈபிஆர்எல்எப் உட்பட்ட கட்சிகள் அங்கம் வகிக்கவுள்ளன

0 கருத்துக்கள் :