சரத் பொன்சேகாவின் உரைக்கு பொலிஸார் தடை

17.1.14

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் உரைக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இன்று மாலை 5.00 மணியளவில் பலபிட்டிய பிரதேசத்தில் கூட்டமொன்றில் உரையாற்ற சரத் பொன்சேகா தயாராகியுள்ளார்.
அதன் போது, 300க்கும் மேற்பட்ட பொலிஸார் அந்த இடத்தை முற்றுகையிட்டு உரையை ரத்து செய்துள்ளனர்.
பொலிஸார் உரையை இடைநிறுத்தியதனைத் தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கூட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த பொலிஸாரின் அனுமதி பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் கூட்டத்தை ரத்து செய்வதாக அம்பலாங்கொடை பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், சரத் பொன்சேகா மெகாபோன் ஒன்றைப் பயன்படுத்தி மக்களுக்கு உரையாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :