வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் நபர்களிடம் கொள்ளையிடும் குழு

9.1.14

வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பும் நபர்களிடம் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொள்ளையிடும் நபர்கள் பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து திருப்பும் நபர்களை பேசி மயக்கி, வாடகை வாகனங்களில் ஓட்டுநர்களாக தம்மை இனங்காட்டி நாடும் திரும்பும் நபர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லவதாக கூறி, இடை நடுவில் மயக்க மருந்தை கொடுத்து பொருட்களை கொள்ளையிட்டு வரும் குழுவொன்று இயங்கி வருகிறது.
இவ்வாறான சம்பவங்களை எதிர்நோக்கியிருந்தால் அது குறித்து மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் 011-297777, 077-8272677, 077-5581926 மற்றும் 011-2947780 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :