யுத்த கால வீடியோக்கள் 30,000 அமெரிக்க டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன

22.1.14

யுத்த கால வீடியோக்கள் 30,000 அமெரிக்க டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊடகங்களே சர்வதேச சமூகத்திற்கு இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான வீடியோ காட்சிகளை விநியோகம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக அரசாங்க ஊடகவியலாளர்களே இவ்வாறு இறுதிக் கட்ட யுத்தம் பற்றிய வீடியோ காட்சிகளை விற்பனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சில வீடியோக்கள் 30,000 அமெரிக்க டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், அரசாங்க ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவரின் லாப்டாப்பில் இவ்வாறான வீடியோ காட்சிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் தம்மிடம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அரசாங்க ஊடகங்களுக்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் குறைபாடுகளே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நெருக்கடி நிலைமைகள் ஏற்படக் கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் உறுதியளித்த போதிலும், அந்த உறுதிமொழி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச தரத்திலான சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துக்கள் :