வெல்லும்வரை ஓயமாட்டோம்

5.12.13

வரலாற்றுக்காலத்தில் மக்கள் தமது இனங்களிற்குள் போரினால் படும் துன்பங்களைத் தவிற்பதற்காகச் சில அடிப்படைச் சட்டங்களை வகுத்துக் கொண்டார்கள். இந்தப் போர்கள் சிறிய அளவாக நடந்த போது அந்தப் போரில் கலந்து கொண்ட அணிகள் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொண்டன. ஆனாலும் நவீனகால யுத்தங்களின் அளவும் சட்ட மீறல்களும் இந்தச் சட்டத்தை மேலும் இறுக்குவதற்கான வழியை வகுத்துக் கொண்டது.

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும் செம்பிறை இயக்கமும் இணைந்து ஹென்றி டனன்ட் தலைமையில் 1864ம் ஆண்டு முதலாவது மனிதாபிமானச் சட்டத்தினை (Inernational Humanitarian Law) உருவாக்கி அதனைச் சண்டையிடும் அணிகள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை உருவாக்கினார்கள். 1949ம் ஆண்டிலிருந்து ஜெனிவா உடன்படிக்கையானது. தனது முக்கியமான உடன்படிக்கைகளைத் திருத்தி அமைத்து இந்த மனிதாபிமானச் சட்டத்தினை உள்வாங்கி உள்ளது. பல சர்வதேச போர் உடன்படிக்கைகள் கூட இதனைத் தம்முள் உள்வாங்கி உள்ளது.

பல நுற்றாண்டுகளாகச் சர்வதேசம் உள்நாட்டிற்குள் இரு இராணுவத்தின் போரிற்குள் தலையிடுவது இல்லை என்ற கொள்கையுடனேயே இருந்து வந்தது. ஆனாலும் பனிப்போர்மற்றும் சர்வதேசத்தைச் செயலிழக்கச் செய்த ருவண்டா மற்றும் செரப்ரனிக்காப் படுகொலைகளும் அதன் பின்னரான நேட்டோவின் தலையீடும் மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் பார்த்துக் கொண்டு சர்வதேசம் இன்னம் மௌனமாக இருக்க முடியாது என்பதை உணர்த்தியது. இதன்பின்னர் ஜ.நா 2005ம் ஆண்டில் RESPONSIBLITY TO PROTECT (R2P) எனப்படும் பாதுகாப்பதற்கான பொறுப்பு எனும் சட்டவரைபை உருவாக்கியது.

முதலில் இச்சட்டவரைபு ஒவ்வொரு நாட்டிற்கும் தனது நாட்டிற்குள் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் கடமையை உணர்த்த உருவாக்கப்பட்டது. ஆனாலும் இதன் திருத்தப்பட்ட இரண்டாவது வரைபானது  ஒரு நாடு தனது மக்களை இனப்டுகொலை அல்லது பாரிய படுகொலைகளிலிருந்து காப்பாற்றத் தவறினால் அல்லது தனது மக்கள் மீதே படுகொலைகளை மேற்கொண்டால் அந்த நாட்டின் இறையாண்மையைக் கருத்திற் கொள்ளாது.
சர்வதேசம் உடனடியாக அந்த மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றப்பட்டது. ஐ.நாவின் பாதுகாப்பதற்கான பொறுப்பு 138 மற்றும் 139வது சட்டவரைபுகளில் உள்ளடக்கப்பட்டது.

138. Each individual State has the responsibility to protect its populations from genocide, war crimes, ethnic cleansing and crimes against humanity. This responsibility entails the prevention of such crimes, including their incitement, through appropriate and necessary means. We accept that responsibility and will act in accordance with it. The international community should, as appropriate, encourage and help States to exercise this responsibility and support the United Nations in establishing an early warning capability.

138. ஒவ்வொரு தனியான நாடுகளிற்கும் இனப்படுகொலை, போர்க்குற்றம், இனச்சுத்திகரிப்பு, மனிதத்திற்கெதிரான குற்றம் என்பவற்றில் இருந்து தனது மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்தப் பொறுப்பானது இக்குற்றங்களைத் தடுப்பதோடு அக்குற்றங்களைத் துண்டுபவர்களைத் தடுப்பதற்கும் தனது அனைத்து வளங்களையும் உபயோகிக்க வேண்டிய கடமைமைய உணர்த்துகின்றது.
நாங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதற்கிணங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். சர்வதேச சமூகம் இப்படியான கடமையை ஆற்றும் நாடுகளிற்குப் பொருத்தமான ஊக்குவிப்புக்களையும் உதவிகளையும் செய்ய வேண்டும். அத்தோடு சர்வதேச சமூகம் தனது ஆதரவினை ஜ.நாவிற்கு வழங்கி இப்படியான ஆபத்துக்களை முன்னரே கண்ணடறிந்து அபாய எச்சரிக்கையினை அறிவிக்கும் திறனை வளர்க்க உதவ வேண்டும்.

139. The international community, through the United Nations, also has the responsibility to use appropriate diplomatic, humanitarian and other peaceful means, in accordance with Chapters VI and VIII of the Charter, to help protect populations from genocide, war crimes, ethnic cleansing and crimes against humanity. In this context, we are prepared to take collective action, in a timely and decisive manner, through the Security Council, in accordance with the Charter, including Chapter VII, on a case-by-case basis and in cooperation with relevant regional organizations as appropriate, should peaceful means be inadequate and national authorities manifestly fail to protect their populations from genocide, war crimes, ethnic cleansing and crimes against humanity. We stress the need for the General Assembly to continue consideration of the responsibility to protect populations from genocide, war crimes, ethnic cleansing and crimes against humanity and its implications, bearing in mind the principles of the Charter and international law. We also intend to commit ourselves, as necessary and appropriate, to helping States build capacity to protect their populations from genocide, war crimes, ethnic cleansing and crimes against humanity and to assisting those whis before crises and conflicts break out.

139. சர்வதேச சமூகமானது ஐ.நாவின் ஊடாக சரத்துக்கள் ஐந்து மற்றும் எட்டின் அடிப்படையில் பொருத்தமான இராஜதந்திர, மனிதாபிமான மற்றும் அமைதி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி இனப்படுகொலை, போர்க்குற்றம், இனச்சுத்திகரிப்பு, மனிதத்திற்கெதிரான குற்றம் போன்றவற்றில் சிக்கி அழியும் மக்களிற்கு உதவி அவர்களைக் காப்பாற்றும் கடமை உடையது.
இதனடிப்படையில், நாம் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவுகளின் மூலம் பாதுகாப்புச் சபையினுடாக ஆறாவது மற்றும் எட்டாவது பிரிவுகளின் படியும் அத்தோடு ஏழாவது பிரிவின் படியும் அந்தப் பகுதியின் பொருத்தமான அமைப்புகளுடன் இணைந்து அமைதியான முயற்சிகள் பயனளிக்காவிடில் ஒரு தேசம் தனது மக்களை இனப்டுகொலை, போர்க்குற்றம், இனச்சுத்திகரிப்பு, மனிதத்திற்கெதிரான குற்றம் ஆகியவற்றில் இருந்து காக்கத் தவறினால் ஒரு பொருத்தமான கூட்டு நடவடிக்கையை அம் மக்களைக் காப்பாற்ற எடுக்க வேண்டும்.

நாம் ஜ.நா பொதுச் சபைக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் அவர்களிற்குரிய பாதுகாக்க வேண்டிய கடமையை உணர்த்தி மக்களை இனப்டுகொலை, போர்க்குற்றம், இனச்சுத்திகரிப்பு, மனிதத்திற்கெதிரான குற்றம் ஆகியவற்றில் இருந்து காப்பாற்றுவதோடு அதனைத் துண்டுபவர்களையும் தண்டித்துச் சர்வதேச சட்டங்களை நிலை நாட்டவேண்டும். அத்தோடு நாமே எமக்கு கடமைகளை உணர்த்தி தேவையாகவும் பொருத்தமாகவும் இருப்பின் ஒரு தேசத்திற்கு இனப்டுகொலை, போர்க்குற்றம், இனச்சுத்திகரிப்பு, மனிதத்திற்கெதிரான குற்றம் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றும் கட்டமைப்மையும் தகமையையும் வளர்க்க உதவுவதோடு  இப்படியான குற்றங்கள் நடைபெறமுதலே தடுக்க முயல்பவர்களிற்கும் உதவ வேண்டும்.

எனவே இவர்கள் சட்டவரைபுகள் அமைகின்றது. ஒரு தேசம் இனப்டுகொலை, போர்க்குற்றம், இனச்சுத்திகரிப்பு, மனிதத்திற்கெதிரான குற்றம் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றத் தவறினால் அதனைத் தடுக்க வேண்டிய கடமையில் கையெழுத்திட்ட நாடுகள் ஒரு தேசமே இனப்டுகொலை, போர்க்குற்றம், இனச்சுத்திகரிப்பு, மனிதத்திற்கெதிரான குற்றம் ஆகியவற்றைச் செய்யும் போது தமது பொறுப்புகளைச் செய்யாததன் மூலம் தாமும் குற்றவாளி ஆகி உள்ளனர்.

பாதுகாக்க வேண்டிய பொறுப்பிற்கு வலுச் சேர்க்கும் வகையில் சர்வதேச மனிதாபிதானச் சட்டமானது  தனது சட்டவரைபுகளை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஏற்கனவே கொண்டிருக்க அத்தோடு மிக முக்கியமான வலுவான சர்வதேச மனிதாபிமானச் சட்டம் இணைகின்றது. ஆனாலும் ஐ.நாவின் பாதுகாக்க வேண்டிய பொறுப்புச் சட்டமானது மிகவும் ஒடுங்கிய சட்ட வரைபுகளையே கொண்டுள்ளது. ஆனால் சர்வதேச மனிதாபிமானச் சட்டம்  மிகவும் பரந்த பாதுகாப்பை மக்களுக்கு வழங்கி  சர்வதேசச் சட்டங்களை வலுப்படுத்தி உள்ளது.

சர்வதேச மனிதாபிமானச் சட்டமானது 1949ம் ஆண்டின் ஜெனிவா ஒப்பந்தத்தின் முக்கிய நான்கு சட்டங்களையும் தன்னுள் அடக்கிப் பின்னர் திருத்தி அமைக்கப்பட்ட 1977ம் ஆண்டு ஜெனிவா ஒப்பந்தத்தின் சட்டங்களையும் உள்ளடக்கி உள்ளது. அத்தோடு ஆயுதம் மற்றும் பேர்க்குற்றவாளிகளைத் தடுக்கும், தண்டிக்கும் சர்வதேசச் சட்டங்களின் பிரிவுகளையும் உள்ளடக்கி உள்ளது.

சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தினை ஒவ்வொரு நாடும் மதித்து அதன்படி நடக்கக் கடமை உள்ளவர்கள். இது மீறப்படுமாயின் மீறப்பட்டவர்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மூலம் சர்வவேதச நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் வலு சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கு உள்ளது. சர்வதேச மனிதாபிமானச் சட்டம் பல பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது. அதில் ஜெனிவா ஒப்பந்தத்தின் முதலாவது பிரிவின் அடிப்படையில் மக்கள் மீது செய்யப்படும் படுகொலைகள், சித்திரவதைகள், மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படுதல், பாலியல் வல்லுறவு மற்றும் பாரிய குற்றங்கள், வேண்டுமென்றே மக்கள் காயப்படத்தப்படுதல், போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் எந்தநாட்டில் இருந்தாலும் எந்த நாட்டிற்குள் குற்றம் செய்யப்பட்டாலும் தண்டிக்கப்படல் வேண்டும் என்று சர்வதேச மனிதாபிமானச் சட்டம் வலியுறுத்துகின்றது.

பொதுமக்கள் இனப்படுகொலை, போர்க்குற்றம், இனச்சுத்திகரிப்பு, மனிதத்திற்கெதிரான குற்றம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கப்படுவதையும், அவர்கள் வாழ்விடங்கள், கலாச்சார மையங்கள், வழிபாட்டுத் தலங்கள், வரலாற்று நினைவிடங்கள், அழிக்கப்படுவதைப் பாரிய சர்வதேசக் குற்றமாக உள்ளடக்கி உள்ளது. எமது மக்களின் சுதந்திரவாழ்விற்காய் தமிழீழத் தேசிய இனம் அடக்குமுறைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரக்காற்றை சுவாசித்து கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்து தமக்கான சுதந்திரத் தமிழீழ அரசை அமைக்கத் தேசியத் தலைவர் பிரபாகரன் வழியில் நின்று போராடி மண்ணிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த எமது மாவீரச் செல்வங்களின் துயிலும் இல்லங்கள் எமது இனத்தின் வலராற்று நினைவிடங்கள். எமது இனத்தின் வழிபாட்டுத் தலங்கள்.

எமது இனத்தின் மீது சர்வதேச விதிகளை எல்லாம் மீறிக் கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்ட சிறீலங்கா இனவாத அரசு நினைவாலயங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் அழித்துள்ளது. சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தில் இத்தாக்குதல்களை மேற்கொண்ட இராணுவத் தளபதிகளையும் அவர்களின் கட்டளைத்தளபதியான  மகிந்த இராஜபக்சவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வழி செய்கின்றது. இது இன்று சர்வதேசச் சட்டங்களாலும் சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றங்களாலும் உள்வாங்கப்பட்டுள்ள ஜெனிவா ஒப்பந்தத்தினை உள்வாங்கி இருக்கும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் வலியுறுத்துகின்றது.
போரில் ஈடுப்பட்ட ஒரு பகுதியின் காயப்பட்டவர்களையும் மருத்துவ உதவி தேவைப்டுபவர்களையும் தாக்குவதோடு மண்ணிற்காக வீழ்ந்து பட்டவீரர்களின் கல்லறைகளைத் தாக்குவதையும் இச்சட்டம் வலுவாகக் கண்டிக்கின்றது. இந்தச் சட்டத்தினை நாம் கையில் எடுத்து சிறீலங்கா மீது எமது மாவீரர்களின் விதைகுழிகள் மீது மேற்கொண்ட அழிப்பையும் மாவீரர் துயிலும் இல்லங்களின் மீது தமது இராணுவ முகாம்களையும் அமைத்துச் சர்வதேசச் சட்டங்களையும் ஒன்றாகவே புதைத்துள்ள சிறீலங்கா இராணுவம்மீதும் சிங்கள ஜனாதிபதியையும் இனப்டுகொலைகளிற்காவும் சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்களிற்காவும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு வருவதே நாம் மாவீரர்களிற்குச் செய்யும் உண்மையான வீரவணக்கமாகும்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டமானது ஜ.நாவின் பாதுகாக்கும் பொறுப்புச் சட்டத்துடன் இணைந்து ஒரு நாடு தனது இராணுவத்தளபதிகள் மற்றும் அது சார்ந்த குழுக்கள் இனப்டுகொலை, போர்க்குற்றம், இனச்சுத்திகரிப்பு, மனிதத்திற்கெதிரான குற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டு அதனைத் தானே விசாரித்துத் தண்டணை கொடுக்காவிட்டால் அந்த நாட்டின் இறையாண்மையையும் மீறி அவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரும் சட்டபூர்வமான வலுக் கொண்டது. இனப்படுகொலையை ஆணையிட்ட சிங்கள ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச தன்னையும் தனது இராணுவத்தையும் தனது தம்பியும் பாரிய மனிதாபிமானக் குற்றவாளியான இனப்டுகொலையாளன் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத்தின் ஜனாதிபதிக்கடுத்த நிலையிலுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட கோத்தபாய இராஜபக்சவையும் என்றுமே விசாரிக்கப் போவதில்லை. இதன் மூலம் சர்வதேச விசாரணையைச் சிறீலங்கா மீது கொண்டுவர நாம் வலுவாக ஒன்றிணைந்து பேராட வேண்டும்.

சிறீலங்கா அரசிற்குத் துணைநிற்கும் எம் இடையேயுள்ள வர்த்தக நிறுவனங்களையும் புறக்கணித்து அவர்களின் பொருளாதார வளங்களையும் முடக்க வேண்டும். எமது பணத்தையே உறிஞ்சி எமது மக்களின் உழைப்பையும் மனிதபிமானமற்ற முறையில் சுரண்டி தம்மை வளர்த்துக் கொண்டு சிறீலங்கா அரசு சர்வதேசத்தின் முன் தன்னை அமைதியான நாடென்று அறிவிக்கத் தமது பணத்தை அள்ளி வழங்கும் லைக்கா குழுமம் போன்ற நிறுவனங்களையும் புற்கணித்து சிறீலங்வில் இருந்து இறக்குமதியாகும் யானைமார்க், மலிபன், மதுபானங்கள் போன்றவற்றை முற்றாகப் புறக்ணிக்க வேண்டும். அதே பொருட்களை வேறு பெயரில் அட்டையை மாற்றி விநியோக்கிக்கும் நிறுவனங்களின் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்.

பொருளாதாரத்திலும் சிறீலங்கா தனிமைப்படுத்தப்பட்டு மண்டியிட நாம் எமக்கான கட்டுப்பாடுகளை எம்மனதில் உருவாக்கி முற்று முழுதாகச் சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும். சிறீலங்கா அரசைக் குற்றவியல் நீதிமன்றம் கொண்டு வந்து அதன் மூலம் எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்டுகொலையை சர்வதேசம் அங்கீகரிக்கச் செய்து எமக்கான விடுதலையும் சுதந்திரமான தமிழீழ அரசும் உருவாக்கப்படும் வரை நாம் என்றுமே ஓய்ந்து விடவோ அல்லது சோர்ந்து விடவோ மாட்டோம் என, எமது மாவீரர்களை எமது மனதில் வைத்து மாவீரர்களின் தியாகங்களிற்கும் பெருவீரத்திற்கும் தலைவணங்கி அவர்கள் மீது அவர்களின் கல்லறை மீது நாம் இந்த மாவீரர் தினத்தில் மாவீரர்கள் மீது உறுதி எடுத்துக் கொள்வோம்.

நன்றி: ஈழமுரசு

0 கருத்துக்கள் :