மல்லாவி, வவுனிக்குளப் பகுதிகளுக்கு புதிய சமாதான நீதவான் நியமனம்

31.12.13

முல்லைத்தீவு மாவட்டம் சிவபுரம் வவுனிக்குளத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை யோகதாஸன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ம.கணேசராஜா முன்னிலையில் சமாதான நீதவானாக இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

பாண்டியன் குளம் துணுக்காய் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் காசாளராக இணைந்து, பின்னர் பொது முகாமையாளராகப் பதவி உயர்வு பெற்றார்.

இவ்வருடம் பொது முகாமையாளராக தனது வெள்ளிவிழா ஆண்டில் கால்பதிக்கும் இவர் சங்கத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டதுடன், சிவபுரம் கிராமத்தில் சமூகச் செயற்பாடுகளிலும் ஈடுபாடு உடையவரென தெரிவிக்கப்படுகிறது.

மல்லாவி வவுனிக்குளம் பகுதியில் சமாதான நீதவான் ஒருவரின் தேவை மிகவும் வேண்டப்பட்டிருந்த நிலையில், குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் வதிரி மெதடிக் மிஷன் அ.தக பாடசாலை, கரவெட்டி திரு இதயக்கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலம் ஆகியவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :