இலங்கை அகதி தமிழகத்தில் தீக்குளித்துத் தற்கொலை!!

28.12.13

தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார். பெரம்பலூர் பகுதியில் உள்ள அகதி முகாமில் தங்கி இருந்த ஒருவர் நேற்றைய தினம் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே. கோவிந்தசாமி என்ற 40 வயதான ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணங்கள் எவையும் இன்னும் வெளியாகவில்லை. பெரம்பலூர் காவற்துறையினர் விசாரணை நடத்துகின்றன

0 கருத்துக்கள் :