கணவனை கொன்று சிறை சென்று திரும்பி வந்த மனைவி கள்ளக்காதலனுடன் தற்கொலை

27.12.13

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், பேரிகை அருகே உள்ள கொம்மர் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது-35). இவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த சீனப்பா மனைவி மஞ்சுளாவிற்கும் “கூடாநட்பு” இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தன்னுடைய மனைவியுடனான இந்த கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட சீனப்பாவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்த வழக்கில் நரசிம்மன், மஞ்சுளா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்து ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து பேரிகை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :