இலங்கையை சென்றடைந்துள்ளார் யசூசி அகாஷி

9.12.13

ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதியான யசூசி அகாஷி நேற்றிரவு இலங்கையை சென்றடைந்துள்ளார். போரின் பின்னதான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இவர் இலங்கை சென்றுள்ளார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அகாஷி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரச அதிகாரிகள், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

2002 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு விஜயம் செய்து வரும் யசூசி அகாஷியின் இந்த இலங்கைப் பயணமானது அவரது 23 வது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :