தூக்கில் போடும்போது தைரியமாக இருந்த சதாம் உசேன்: அருகில் இருந்த அதிகாரி தகவல்

28.12.13

ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் சதாம்உசேன். இவர் கடந்த 1979–ம் ஆண்டு முதல் 2003–ம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் அதிபராக இருந்தார். கடந்த 2003–ம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பின்னர் பண்ணை வீட்டில் பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சதாம் உசேனை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. 3 ஆண்டு விசாரணைக்கு பிறகு 2006 டிசம்பர் 30–ந்தேதி அவர் தூக்கிலிடப்பட்டார்.
தற்போது வடக்கு பாக்தாத் நகரில் காதிமியா பகுதியில் உள்ள சிறைக்கு அருகே சதாம்உசேனின் மார்பளவு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. அச்சிலையின் கழுத்தை சுற்றி சதாம்உசேனை தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட உண்மையான கயிறு சுற்றப்பட்டுள்ளது.

சதாம்உசேனை தூக்கில் போடும்போது அதை மொவாபக் அல் ருபேஸ் என்பவர் அருகில் இருந்தார். இவர் ஈராக்கின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.

அவர் சதாம்உசேன் வாழ்வின் இறுதி கட்ட நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார். சதாம் உசேனை தூக்கிலிட பாக்தாத் சிறைக்கு அழைத்து சென்றேன். எங்களுடன் அமெரிக்கரோ, வேறு நாட்டினரோ இல்லை. அப்போது அவர் வெள்ளை நிற சட்டையும், மேலங்கியும் அணிந்து இருந்தார்.

நிதானமாகவும் மிகவும் இயல்பாகவும் இருந்தார். அவரிடம் பயத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை. நாம் சாகப்போகிறோமே என்ற வருத்தமும் இல்லை. தனக்கு இரக்கம் காட்டும்படி கடவுளிடம் அவர் கோரிக்கை விடுக்கவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.

தூக்கு மேடைக்கு அழைத்து சென்று அங்கு நிறுத்தியபோதும் அவர் மிகவும் தைரியமாக இருந்தார். அவரின் கால்கள் மிக உறுதியாக இருந்தன என தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :