வாளேந்தியகொடி தமிழர்களுக்கு உரிய கொடியல்ல. அமைச்சர் பொ. ஐங்கரநேசன்

9.12.13

இலங்கையின் தேசியக் கொடியை புறக்கணிக்கப் போவதாக வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை இந்த தேசியக்கொடி பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதன் காரணமாகவே அதனை புறக்கணிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஏற்பாட்டாளர்கள் அமைச்சர் ஐங்கரநேசனை தேசியக் கொடியை ஏற்ற அழைத்த போது அமைச்சர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.அதற்கு பதிலாக அவர் மாகாண கொடியை ஏற்றிவைத்தார்.

இந்தநிலையில் எதிர்வரும் நிகழ்வுகளில் மாகாணக் கொடிகளை மாத்திரமே ஏற்றுமாறு அவர் கோரினார். வாளேந்திய நிலையில் உள்ள சிங்கம் தமிழர்களுக்கு உரிய கொடியல்ல என்று அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

0 கருத்துக்கள் :