யாழில் இன்று போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விசேட மாநாடு

17.12.13

யாழ்.மாவட்ட செயலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக விசேட மாநாடு ஒன்று இன்று செவ்வாய்கிழமை யாழ். இந்து பௌத்த கலாசாரப் பேரவையினால் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கு எடுக்கவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இம் மாநாட்டைத் தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு அலுவலகம் ஒன்றும் யாழ்.மாவட்ட செயலகத்தில் திறக்கப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இம் மாநாட்டில் யாழ்.இந்து பௌத்த கலாச்சாரப் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துக்கள் :