யாழில் அதிகரிக்கும் பாலியல் வல்லுறவு தொடர்பான முறைப்பாடுகள்!

10.12.13

யாழ்ப்பாணத்தில் பாலியல் வல்லுறவு தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்தள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெற்றோர்களின் விழிப்புணர்வு இல்லாத நிலைமையே இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் 

வல்லுறவுக்குட்படுத்தப்படுவதற்கான காரணமென யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்படுதல், சிறுமிகள்வல்லுறவுக்குட்படுத்தல் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரையில் அண்மைக்காலமாக கலாசார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. சிறுமிகளை ஒரு சில முதியவர்கள் வல்லுறவுக்குட்படுத்துகின்ற சம்பவங்களையும் இளம் பெண்கள் காதல் என்ற வலையில் வீழ்ந்து வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களையும் பத்திரிகைகளின் வாயிலாக அறியமுடிகிறது.மேலும் குடாநாட்டின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் வகையில் மர்மமான முறையில் இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் எமது கலாசாரத்தை பாதிக்கும் வகையிலேயே இடம்பெற்று வருகிறது.

எனவே, பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் தமது பெண்பிள்ளைகள் குறித்து அக்கறையாக இருக்கவேண்டும். பெண்பிள்ளைகளை தனிமைப்படுத்துவதைதவிர்த்துக்கொள்ளுங்கள்.எந்தநேரமும் அவர்களை உங்களது கண்காணிப்பில் வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறான கலாசார சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தும்
முக்கிய பங்கு பத்திரிகைகளுக்கும் உண்டு. அவற்றின் ஊடாகவே எமது கலாசாரத்தை பாதுகாக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :