மனித உரிமைகள் நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கை வருகிறார் நிஷா..!

27.12.13

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது.

 ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலாளர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை வரவுள்ள நிஷா தேசாய், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
   
அமெரிக்க அனுசரணையில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
 

0 கருத்துக்கள் :