யேர்மன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அனந்தி சசிதரன் சந்திப்பு!

17.12.13

சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்.

அந்தவகையில் வடமாகாண சபை உறுப்பினராகிய அனந்தி சசிதரன் அவர்கள் மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக யேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சில் உயர்மட்ட அரச அதிகாரிகளை சந்தித்து தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துரைத்தார் .

அத்தோடு தமிழ் மக்கள் சுந்திரமாகவும் உரிமையோடும் தமது பூர்வீக மண்ணில் வாழ அனைத்துலக சமூகத்தின் ஆதரவின் அவசியம் ஏன் என குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதைத்தொடர்ந்து சர்வதேச ரீதியாக செயற்படும் மனிதவுரிமை அமைப்புடனும் சந்திப்பு நடைபெற்றது . இச் சந்திப்பில் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் விடையமாக கலந்துரையாடப்பட்டது.
இறுதியாக யேர்மன் அரசியல் கட்சிகளுடனும் சந்திப்பு நடைபெற்று அங்கும் தமிழ் மக்களின் இன்றைய வாழ்வியல் நிலமைகளை எடுத்துரைத்து குறிப்பாக போர் கைதிகள் விடையமாகவும் பேசப்பட்டது.

0 கருத்துக்கள் :