தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை. முன்னாள் வெளியுறவு அமைச்சர்

16.12.13

தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் கட்சி கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.    

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை எட்டுதல் தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சியின் ஒன்றுகூடலில் விவாதிக்கப்பட்ட போது, தற்போது இந்த நிலை வேறுபட்டுள்ளது என்பதை ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியுள்ளார்.   ஈழம் என்பது மிகக் கிட்டிய தூரத்தில் உள்ளது.
தற்போது பங்களாதேஸ் சுதந்திர நாடாக மாறிவிட்டது. இதேபோன்று வடசூடான் மற்றும் தென்சூடான் ஆகியனவும் தற்போது சுதந்திரமடைந்துவிட்டன என ஜஸ்வந்த் சிங் தனது விவாதத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சதீவை இந்தியா மீண்டும் தனக்குச் சொந்தமாக்க வேண்டும். இதன்மூலம் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் நிச்சயப்படுத்தப்பட்டு அவர்களுக்கான மீன்பிடி எல்லைகள் மீளவரையறுக்கப்பட முடியும். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது தடுக்கப்பட முடியும்.

இந்தியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையானது குழப்பமானதாக உள்ளது. நாட்டின் எதிர்காலம், அதிகாரம் மற்றும் உறுதித்தன்மை போன்றன ஆபத்திற்கு உள்ளாகலாம். தற்போது இந்தியாவை ஆளும் அரசாங்கமும் பிரதமரும் பலவீனமானவர்களாக இருக்கலாம்.
ஆனால் இந்திய மக்கள் பலவீனமானவர்கள் அல்ல என்றார்.   மேலும், எமது அயல்நாடான இலங்கையில் வடக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் தான் பொறுப்பு என்பதை மக்களிடம் வீடுவீடாகச் சென்று எடுத்துக்கூற வேண்டும் என முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தினார்.

0 கருத்துக்கள் :