எம்.பி ராதிகாவை கைது செய்ய சிறீதரன் அலுவலகம் சென்ற குடிவரவு அதிகாரிகள்

31.12.13

இன்று மதியம் 13.00 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் ராதிகா சிற்சபேசன் இருக்கிறாரா என்ற விசாரணையை நடத்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உறுதிப்படுத்தினார்.

இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரி ரணவீர தலைமையிலான பெண் பொலிசார் இருவர் கொண்ட குழுவே ராதிகாவினுடைய இலங்கைப் பயணம் குறித்த கேள்விகளை கேட்டதாகவும், அது குறித்து எதுவும் தமக்கு தெரியாது என அவர் கூறியதாகவும் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
ராதிகா சிற்சபேசன் இங்கு இருப்பதாக தகவல் கிடைத்தது என்றும், அவ்வாறு இருந்திருந்தால் கைது செய்யப்பட்டிருப்பார் என வந்த குடிவரவு குடியகல்வு அதிகாரி ரணவீர தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய குடிவரவு அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் ராதிகா தங்கியிருந்த இடம் எனக் கருதப்படும் பகுதியில் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துக்கள் :