கடற்படை வீரரால் நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்

30.12.13

குச்­ச­வெளி பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட திரி­யாய 5 ஆம் வட்­டா­ரத்தில் 4 வயது சிறு­மி­யொ­ருவர் கடற்­படை வீரர் ஒரு­வ­ரினால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வ­மொன்று நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.குறித்த பகு­திக்கு பௌசர்­களின் மூலம் நீர் விநி­யோ­கித்து வரும் கடற்­ப­டையைச் சேர்ந்த ஒரு­வ­ரி­னா­லேயே மேற்­படி சிறுமி துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குச்­ச­வெளி பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

வீட்டில் யாரும் இல்­லாத நிலையில் தனது சகோ­த­ரி­யுடன் இருந்த சிறு­மியை அழைத்துச் சென்ற குறித்த நபர் அவரை துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.

இது தொடர்பில் சிறு­மியின் பெற்றோர் குச்­ச­வெளி பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ள அதே­வேளை சிறுமி திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­வ­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கடற்படை பேச் சாளர் கோசல வர்ணகுலசூரியவை தொடர்பு கொண்டு வினவிய போதுஇ அப்படி ஒரு சம்பவம் நடந்தமை தொடர்பில் தனக்கு இதுவரை தெரியவில்லை எனவும் அது தொடர்பில் தேடிப்பார்ப்பதாகவும் குறிப் பிட்டார்.

0 கருத்துக்கள் :