அரபு மொழி கற்க்கவில்லை அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்து சித்ரவதை

24.12.13

திருப்பூர் அருகே 6 வயது சிறுவனை அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக மதரசா பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அப்துல் ஹக்கீம் என்பவர் தனது மகன் இப்ராகிமை, அரபு மொழி கற்பதற்காக மங்கலம் அருகே புதூரில் மதரசா பள்ளியில் சேர்த்துள்ளார். இந்தநிலையில் மகனை பார்க்க சென்றபோது பள்ளி நிர்வாகி முகமது ஷேக் பரீக், இப்ராகிமை காட்டாமல் மறைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த அப்துல் ஹக்கீம், தொடர்ந்து வலியுறுத்தியதால் மகனை பார்க்க அனுமதிக்கப்பட்டார். அப்போது மகனின் உடலில் பல பகுதிகளில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் மகனை மருத்துவமனையில் சேர்த்தார்.

இதுகுறித்து மங்கலம் காவல்நியைத்தில் அப்துல் ஹக்கீம் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மதரசா பள்ளி நிர்வாகி முகமது ஷேக் பரீக்கிடம் விசாரயை மேற்கொண்டனர். சிறுவன் இப்ராகிம் அதிகாலையில் எழுந்து படிக்கவில்லை என்பதாலும், குறும்பு செய்ததால் உடம்பில் அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்ததாக முகமது ஷேக் பரீக் விசாரணையில் கூறியதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பள்ளி நிர்வாகியை கைது செய்த போலீசார், திருப்பூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி வேலுசாமி உத்தரவிட்டார்.

0 கருத்துக்கள் :