பெண்கள் கழிவறையில் வீடியோ கெமரா அனுராதபுரம்

27.12.13

அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண்கள் கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கெமரா தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்திய சாலைப் பணிப்பாளர் டாக்டர் விஜேதாச அத்தபத்து இது தொடர்பாகத் தெரிவிக்கையில்-
நான்கு தினங்களுக்கு முன் வைத்திய சாலை ஊழியர் ஒருவரால் இவ்வாறான ஒரு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் வைத்திய சாலை பெண் ஊழியர்கள் பாவிக்கும் ஒரு கழிவறையில் இவ்வாறு ஒரு சிறிய வீடியோ கெமரா பொருத்தப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டதாகவும் இது யாருடைய வேலை எனத் தெரிய வில்லை என்றும் கூறியுள்ளார்.
ஒரு கட்டிடத்தின் மேல் மாடியிலே இக்கழிவறை அமைந்துள்ளது. து தொடாபாக சுகாதார அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன் எடுக்கப்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துக்கள் :