ஒரு மதத்தின் வெற்றிக்களிப்பு ஏனையவர்களை புண்படுத்தக்கூடாது:

25.12.13

வெற்றிக்களிப்பு காரணமாக மற்றும் ஒரு இனத்துக்கு பாதகம் ஏற்படக்கூடாது என்று இலங்கைக்கான கர்தினால் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நத்தார் ஆராதனைகள் வத்தளையில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடம்பெற்றன.

இதன்போது உரையாற்றிய கர்தினால் வெற்றிக்களிப்பை கொண்டாடுவது குற்றமாகாது. ஆனால், அதன்மூலம் ஏனைய இனங்கள் பாதிக்கப்படுவதை புனித கிறிஸ்தவம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
இதேவேளை வடக்கு, கிழக்கு உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நத்தார் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 கருத்துக்கள் :