விளைவை சம்பந்தன் விரைவில் உணர்வார் : அரசாங்கம் அறிவிப்பு

26.12.13

சமா­தா­னத்தை விரும்­பாத கூட்­ட­மைப்­பினரை தெரிவுக்குழு­விற்கு அழைப்­பதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை. தெரிவுக்குழுவை நிரா­க­ரித்­ததன் விளை­வு­களை சம்­பந்தன் விரைவில் உணர்ந்து கொள்வார் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி அரசாங்கம் செயற்படவில்லை. எமது செயற்பாடுகளை எவ்வித தடைகளுமின்றி நாம் முன்னெடுத்துச் செல்வோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அர­சாங்­கத்தின் பாரா­ளு­மன்றத் தெரிவுக்­கு­ழுவில் பங்­கேற்­ப­தில்லை என்று வவு­னி­யாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உயர்­மட்டக் கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இது குறித்து அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ள­ரிடம் கருத்துக் கேட்­ட­போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

நாட்டில் சமா­தானம் நில­வ­வில்லை. தமிழ் மக்­களின் உரிமைகள் பறிக்­கப்­ப­டு­கின்­ற­தென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். உண்­மை­யி­லேயே தமிழ் மக்­களின் உரி­மை­களில் கூட்­ட­மைப்­பிற்கு அக்­கறை இருக்­கு­மானால் அர­சாங்­கத்­துடன், தெரிவுக் குழு பேச்­சு­வார்த்­தைக்கு வந்­தி­ருப்­பார்கள். ஆனால் சமா­தா­னத்­தையோ நாட்டின் அமைதிச் சூழ­லையோ தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு விரும்­ப­வில்லை. அதனால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினை பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்­பதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை. காலத்தை வீண­டித்து காத்­தி­ருப்­ப­தனால் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களே வீண­டிக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு சரி­யான முடி­வெ­டுக்கத் தெரி­ய­வில்லை. இரு மனதில் தீர்­மா­ன­மெ­டுப்­பதன் கார­ணத்­தி­னா­லேயே நாட்டில் குழப்பம் ஏற்­ப­டு­கின்­றது. அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்­கை­யி­ருக்­கு­மாயின் தெரிவுக் குழுவில் கலந்­து­கொண்டு நல்­ல­தொரு தீர்­மா­னத்­திற்கு இணங்க முடியும். ஆனால் இன்னும் அர­சாங்­கத்தை நம்­பு­வதா? இல்­லையா? என்ற குழப்­பத்தில் சம்­பந்தன் செயற்­பட்டு வரு­கின்றார்.

அதேபோல் தெரிவுக் குழுவை நிரா­க­ரிப்­பதன் மூல­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பல நல்ல விட­யங்­களை இழக்­கின்­றது. இதனை வெகுவிரைவில் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் விளங்கிக் கொள்வார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னையோ ஏனைய கட்­சி­க­ளையோ நம்பி அர­சாங்கம் செயற்­ப­ட­வில்லை. அர­சாங்கம் எப்­போதும் மக்­களை நம்­பியே செயற்­பட்டு வரு­கின்­றது. கூட்­ட­மைப்­பினர் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகி­யன சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் நாட்டை குழப்பி அர­சாங்­கத்­தினை கவிழ்க்க முடியாது. இலங்­கையின் உண்மை நிலை­யினை சர்­வ­தேச நாடுகள் விளங்கிக் கொள்­வதை விடவும் நாட்டு மக்கள் விளங்கிக் கொள்வதே முக்கியமானது. அதை மக்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர்.

யார் நாட்டிற்கு எதிராக செயற்பட்டாலும் எல்லாத் தடைகளையும் தகர்த்து ஆட்சியினை முன்னெடுத்து செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :